search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஷ்பிகுர் ரஹிம்"

    நாங்கள் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் கலந்து கொள்வதற்காக மட்டுமே செல்லமாட்டோம், கோப்பையை வெல்லவே செல்கிறோம் என முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதில் வங்காளதேச அணியும் ஒன்றும். கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காலிறுதி வரை முன்னேறியது.



    அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், ‘‘நாங்கள் இங்கிலாந்து செல்வது, சும்மா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு மட்டுமல்ல. கோப்பையை வெல்வதற்காகவும்தான். இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.
    வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷாய் ஹோப்பின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் தமிம் இக்பால் (50), முஷ்பிகுர் ரஹிம் (62), ஷாகிப் அல் ஹசன் (65) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஹேம்ராஜ் (3), அடுத்து வந்த டேரன் பிராவோ (27), சாமுவேல்ஸ் (26), ஷிம்ரோன் ஹெட்மையர் (14) குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 144 பந்தில் 146 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 49.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    டாக்காவில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. மொமினுல் ஹக்யூ (161), முஷ்பிகுர் ரஹிம் (219 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்தது.

    பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. பிரெண்டன் டெய்லர் (110), பிரையர் சரி (53), மூர் (83) ஆகியோரின் ஆட்டத்தால் 304 ரன்கள் சேர்த்தது.

    முதல் இன்னிங்சில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்காள தேசம் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் மெஹ்முதுல்லா (101 நாட்அவுட்) சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 442 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    443 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது. பிரெண்டன் டெய்லர் 4 ரன்னுடனும், வில்லியம்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. வில்லியம்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜிம்பாப்வே-யின் விக்கெட் சராசரி இடைவெளியில் இழந்தது. ஆனால் பிரெண்டன் டெய்லர் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரெண்டன் டெய்லர் 106 ரன்னுடனும் களத்தில் இருந்தாலும் ஜிம்பாப்வே 83.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் தொடரை 1-1 என சமன் செய்தது.
    ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் வங்காள தேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 2--வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 நாட்அவுட்), மொமினுல் ஹக்யூ (161) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    ஆட்டமிழக்காமல் 219 ரன்கள் குவித்ததன் மூலம் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அந்த சாதனைகள் பின்வருமாறு:-

    1. 219 ரன்கள் அடித்ததன் மூலம் வங்காள தேச பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் அடித்ததுதான் இதற்கு முன் சாதனையாக இருந்தது.



    2. 200 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு முறை சொந்த நாட்டின் சாதனையை முறியடித்த டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லி, வினு மங்கட், பிரையர் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார்.

    3. விக்கெட் கீப்பராக இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரின் அதிபட்ச நான்காவது ஸ்கோர் இதுவாகும்.

    4. 421 பந்துகள் சந்தித்ததன் மூலம் அதிக பந்துகள் சந்தித்த வங்காள தேச பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அஷ்ரபுல் 417 பந்துகள் சந்தித்ததே சாதனையாக இருந்தது.



    5. 589 நிமிடங்கள் பேட்டிங் செய்து டெஸ்ட் இன்னிங்சில் அதிக நிமிடங்கள் பேட்டிங் செய்த வங்காள தேச பேட்டிஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமினுல் இஸ்லாம் 535 நிமிடங்கள் களத்தில் நின்று 145 ரன்கள் சேர்த்துள்ளார்.

    6. 2018-ம் ஆண்டில் அடிக்கப்பட்ட ஒரே இரட்டை சதம் இதுதான். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 192 ரன்கள் அடித்ததே 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.

    7. 160 ஓவர்கள் விளையாடியது 2-வது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன் 2013-ல் 196 ஓவர்கள் விளையாடியுள்ளனர்.
    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. லிட்டோன் தாஸ், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    லிட்டோஸ் தாஸ் 9 ரன்னிலும், இம்ருல் கெய்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது வீரராக களம் இறங்கிய முகமது மிதுன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காள தேசம் 26 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு மொமினுல் ஹக்யூ உடன் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீண்டது. இருவரும் சதம் அடித்தனர். முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் மொமினுல் ஹக்யூ 161 ரன்கள் குவித்து ஆட்டமிழந்னர். முஷ்பிகுர் ரஹிம் -  மொமினுல் ஹக்யூ ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது.

    அடுத்து தைஜுல் இஸ்லாம் களம் இறங்கினார். இவர் 4 ரன்னில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹ்முதுல்லா ஜோடி சேர்ந்தார்.

    வங்காள தேசம் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்தது. முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்னுடனும், மெஹ்முதுல்லா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.



    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மெஹ்முதுல்லா 36 ரன்னிலும், அடுத்து வந்த அரிபுல் ஹக்யூ 4 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    8-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் மெஹிது ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். வங்காள தேசம் 160 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    முஷ்பிகுர் ரஹிம் 219 ரன்களுடனும், மெஹிது  ஹசன் மிராஸ் 68 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் ஜார்விஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

    லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

    இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

    இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் அடித்தபோது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து முஷ்பிகுர் ரஹிம் சாதனைப் படைத்துள்ளார். #MushfiqurRahim
    வங்காள தேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 33 ரன்கள் சேர்த்தார். 7 ரன்னைத் தொட்டபோது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 190 போடடிகளில் 5 ஆயிரம் ரன்னைத் தொட்டார்.

    இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.



    31 வயதாகும் முஷ்பிகுர் ரஹிம் 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2006-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் 6 சதம், 29 அரைசதங்களும், டெஸ்ட் போட்டியில் ஐந்து சதம், 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
    ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் புதிய சாதனைப் படைத்துள்ளது. #AsiaCup2018 #BANvSL
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது.

    இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது. வெளிநாட்டில் அந்த அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளது.



    இதற்கு முன்பு புலவாயோ (ஜிம்பாப்வே) மைதானத்தில் 121 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை வங்காளதேசம் நேற்று துபாய் மைதானத்தில் முறியடித்தது.

    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 6-வது மிகப்பெரிய வெற்றியாகும். அந்த அணி கடந்த ஜனவரி மாதம் டாக்காவில் இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த வெற்றியாகும்.
    ×